மாநில தேர்தல்: கூடுதலாக 9,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 மாநில தேர்தல்களின்போது மொத்தம் 9,602 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்காக, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இந்த நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் என்று தேசிய காவல் படை தலைமை கண்காணிப்பாளரான அவர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு மொத்தம் 9,602 கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) இங்குள்ள கிளாந்தான் போலீஸ் தலைமையகத்தில் மாநில தேர்தல் குறித்த விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூறினார்.

“இந்த எண்ணிக்கை வாக்கு பெட்டிகளை பாதுகாக்கவும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போதுமானது,” என்று அவர் செய்தியாளர் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

இந்நிகழ்வில், கிளாந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருனும் உடனிருந்தார்.

இதற்கிடையில், வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்காக கிளாந்தனில் குற்றம் நிகழலாம் என நம்பப்படும் 16 போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ரஸாருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here