RM14 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மூவர் கைது

கிள்ளான் பள்ளத்தாக்கில் போலீசார் மேற்கொண்ட நான்கு சோதனைகளில் மொத்தம் RM14.4 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர், ஆணையர், டத்தோஸ்ரீ முகமட் கமாருடின் முகமட் டின் கூறினார்.

ஜூலை 13 அன்று, கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்கு வெவ்வெறு சோதனை நடவடிக்கைகளில், 32 வயதில் இருந்து 61 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் கமரிடின் முஹமட் ஸின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அவர்கள் ஒருங்கிணைப்பாளர், விநியோகிப்பாளர் மற்றும் கடை பராமரிப்பாளராக பணியாற்றி வந்ததாக நம்பப்படுகிறது.

அப்போதைப் பொருட்களை உள்ளூர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்பு, அவை கடை வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதிகாரிகள் கண்களை மறைக்க சோப்புப் பொருட்களை போன்று பொட்டலமிட்டு, பொருள் அனுப்பும் சேவையைப் பயன்படுத்தி சபா மற்றும் சரவாக் சந்தைகளுக்கு போதைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமாட் கமாருடின் அவ்வாறு கூறினார்.

நான்கு லட்சம் ரிங்கிட் மதிப்பிலான நான்கு சொகுசு கார்கள். நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தம்மைச் சுற்றி நடக்கும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 012-2087222என்ற எண்களின் வழி ஜே.எஸ்.ஜே.என் பிரிவை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று முஹமாட் கமாருடின் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here