Touch ‘n Go (TNG) பயனர்கள் அனைவரும் இனி மின் -பணப்பை (e-wallet) பயன்பாடு மூலம் உலகின் 10 நாடுகளில் உள்ள பெறுநர்களுக்கு நிதியை மாற்றலாமாம்.
Star Online இன் கூற்றுப்படி, Goremit என்ற புதிய அம்சத்தைச் TNG இப்போது சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
TNG பயனர்கள் பெறுநரின் வங்கிக் கணக்கு, e-wallet (இ-வாலட்) அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்குப் பணப் பரிமாற்றத்தைத் தேர்வு செய்யலாம், அத்தோடு சில விருப்பங்கள் சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
இந்த அம்சம் TNG பயனர்களுக்கு 10 வெவ்வேறு நாடுகளில் உள்ள பெறுநர்களுக்கு நிதியை மாற்றுவதற்கு உதவுகிறது, பிலிப்பைன்ஸில் மட்டுமே மூன்று விருப்பங்களும் உள்ளன, அதே நேரத்தில் சிங்கப்பூருக்கு வங்கி கணக்கு பரிமாற்றங்களை மட்டுமே இந்த பயன்பாடு ஆதரிக்கிறது.
குறித்த சேவைக்கான அணுகலைப் பெற, பயனர்கள் TNG e-wallet உள்ள நிதிச் சேவைகள் திரைக்குச் சென்று Goremit ஐகானைத் தட்ட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாடு மற்றும் பரிமாற்ற முறையின் அடிப்படையில் பரிமாற்றக் கட்டணம் RM8 முதல் RM15 வரை மாறுபடும் என்றும் குறைந்தபட்ச பரிமாற்றக் கட்டணம் RM50 வரை இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.