ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அதிக செலவு ; உலகில் 2 ஆவது இடத்தில் மலேசியா!

ஓட்டுநர் சோதனைக்கு இரண்டாவது அதிக செலவு கொண்ட நாடாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது.

Zutobi என்ற இணைய ஓட்டுநர் கல்வி நிறுவனத்தின் ஆதாரத்தின்படி, மலேசிய ஓட்டுநர் சோதனை முழுமையானது என்றும் அதன் காரணமாகவே அதன் செலவு உயர்ந்துள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

“விண்ணப்பதாரர்கள் கோட்பாடு மற்றும் நடைமுறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும். இதற்கு மேல், மலேசியர்கள் 33 மணிநேரம் போக்குவரத்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பாடங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவிடவேண்டியுள்ளது” என்று Zutobi நேற்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஓட்டுநர் சோதனைகளுக்கான சராசரி கட்டணம் £106 ஆக இருப்பதால், உலகில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அதிக செலவு அறவிடும் முதல் நாடாக குரோஷியா £505 (RM2,959) உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் (£400க்கு மேல்) மலேசியா உள்ளது என்கிறது அந்த அறிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here