பாகிஸ்தானில் கனமழை; சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு

கராச்சி, பாகிஸ்தான் நாட்டில் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபி கடலில் இன்று தீவிரமடைந்து உள்ள பருவகால சூழலால், தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதில் ராவல்பிண்டியில் 200 மி.மீ. அளவுக்கு மழை பொழிவு இருந்து உள்ளது

இந்த நிலையில், இஸ்லாமாபாத் நகரில் பெஷாவர் சாலையில் கோல்ரா மோர் பகுதியருகே, கட்டுமான பணியில் இருந்த பாலம் ஒன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்து உள்ளது. 100 அடி அகலம் மற்றும் 11 அடி உயரத்தில் அந்த சுவரையொட்டி, வசிப்பதற்காக கூடாரம் ஒன்றை தொழிலாளர்கள் அமைத்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில், அந்த சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு பணியாளர்கள் இயந்திரங்களின் உதவியுடன் மீட்டு உள்ளனர்.

இதில் 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இஸ்லாமாபாத் நகரின் முகமதி நகர பகுதியில் இதேபோன்றதொரு சம்பவத்தில் 11 வயது சிறுமி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here