களஞ்சியத்தில் சோதனை; 56,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்

கம்போங் கோலா சுங்கை பாருவில் உள்ள ஒரு களஞ்சியத்தில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சினால் (KPDN) மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மானிய விலையிலான டீசல் கைப்பற்றப்பட்டது.

இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் RM121,217 மதிப்புள்ள 56,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் KPDN இயக்குனர் முகமட் சுஹைரி மாட் ராடே கூறினார்.

இரண்டு மாதங்களாக மேற்கொண்ட உளவுத்துறை தகவலின் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் லோரி வகை வாகனங்கள் நடமாடுவதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“சம்பந்தப்பட்ட வளாகங்கள் சட்டவிரோதமாக டீசல், எண்ணெயை சேமித்து வைக்க அல்லது சேமிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

இந்த வழக்கின் மொத்த பறிமுதல் மதிப்பு மொத்தம் RM 343,417 என்றும், சோதனையின்போது அவ்வளாகத்தில் இருந்த தொழிலாளர்கள் என நம்பப்படும் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here