ஈப்போவில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாகிஸ்தானியர் மீது குற்றச்சாட்டு

கடந்த திங்கட்கிழமை, பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த ஆடவர் ஒருவர், இன்று ஈப்போ மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட முகமட் அக்தர் ரம்ஜான், 28, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.புனிதா முன்நிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் மலாய் மொழியில் வாசிக்கப்பட்டவுடன், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், Luna Eve Waquet, என்ற பெண்ணின் கெளரவத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பாலியல் வன்முறை செய்ததாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டார்.

குறித்த குற்றச்செயல் கடந்த ஜூலை 17 இரவு 11 மணிக்கு, Spot On City Hostel, No. 41, Medan Perhentian Medan Kidd என்ற இடத்தில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் படி, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி அல்லது இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை வழங்குகிறது.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நூருல் ஹிதாயு ஜகாரியா வழக்குத் தொடரப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆர் ராஜசேகரன் ஆஜரானார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டவர் என்பதால் இவ்வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அத்தோடு வழக்கை மீண்டும் செவிமடுக்க ஆகஸ்ட் 17-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here