பாகிஸ்தான் நாட்டில் லாகூர் மாகாண போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வருபவர் ஷெரிக் ஜமால். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால், மனைவி மகளை விட்டு பிரிந்த ஷெரிக் ஜமால் லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வருகிறார். இதனிடையே, டிஐஜி ஷெரிக் ஜமாலுக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் டிஐஜி ஷெரிக் ஜமாலும் தேர்தல் ஆணைய பெண் அதிகாரியும் இன்று அதிகாலை தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, டிஐஜி ஜமால் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென ஜமாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் பெண் தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த டிஐஜி வசித்து வரும் குடியிருப்பில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்து தடைசெய்யப்பட்ட பாலியல் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.