SOCSOவின் வேலைவாய்ப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 23,600 புதிய விண்ணப்பங்கள் பதிவு

இந்தாண்டு ஜனவரி முதல் SOCSO என கூறப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வேலைவாய்ப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் (EIS) கீழ் புதிதாக 23,665 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வி.சிவக்குமார் தெரிவித்தார்.

அவற்றில் மொத்தம் 7,432 விண்ணப்பங்கள், EIS நன்மைக் கொடுப்பனவுகளில் RM91.55 மில்லியனை உள்ளடக்கியதாகவும், ஏனையவை வேலை தேடுதல் கொடுப்பனவு (EMP), குறைக்கப்பட்ட வருமான கொடுப்பனவு, மறு வேலைவாய்ப்பு கொடுப்பனவு மற்றும் பலவற்றை உள்ளடக்கியவை என்று மனிதவள அமைச்சரான அவர் கூறினார்.

“பணிநீக்கங்கள் நடக்கும் முன் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதே EIS திட்டம் ஆகும். வேலையை இழந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் அவர்களின் வருமானம் தொடரும். “இந்த திட்டம் முக்கியமானது ஆனால் பலருக்கு இது பற்றி தெரியாது.

“தொழிலாளர்கள் EIS க்கு பங்களித்தால், அவர்கள் பல்வேறு வகையான உதவிகளிலிருந்து பயனடையலாம்,” என்று அவர் நேற்று நெகிரி செம்பிலானில் இரண்டு நிறுவனங்களின் 30 முன்னாள் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வேலை தேடுதல் கொடுப்பனவை (EMP ) வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here