துன் மகாதீர், ஹாடி அவாங் போன்றவர்களை மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டும்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் போன்றவர்களை மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கெஅடிலான் தலைவர் ஒருவர் கூறினார். மகாதீரும் ஹாடியும் கடந்த மூன்று தசாப்தங்களாக பிரச்சனையாக இருந்து வருவதாக சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.  கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர்கள் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கி, நாட்டின் நலன்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் தங்கள் தனிப்பட்ட நலனில் அக்கறை செலுத்தியுள்ளானர் என்று கெஅடிலான் பொதுச்செயலாளர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

மகாதீரும் ஹாடியும் இனம் தொடர்பான பிரச்சினைகளைத் தூண்டுகின்றனர். மகாதீர் பன்முக கலாச்சாரத்திற்கு எதிராக பேசினார். மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக வசைபாடியதுடன் மலேசிய சமூகத்தின் “பெயர் மற்றும் உரிமையை” மாற்ற விரும்புவதாக உள்ளது என்று கூறினார்.

இதற்கிடையில், இஸ்லாம் அல்லாத மலேசியர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் அல்லாதவர்கள் ஊழலின் வேர் என்று குற்றம் சாட்டிய ஹாடி, அவர்கள் நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சீரழித்ததாக குற்றம் சாட்டினார்.

தலைவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த சைபுஃதீன், அரசியலில் சில நேரங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் என்றார். அரசியலில் பழிவாங்குதல் மற்றும் பொறாமை போன்ற அனைத்தையும் மகாதீரும் ஹாடியும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் நம்புவதாக அவர் கூறினார். அவர்கள் ஒன்றிணைத்தது மலாய்க்காரர்களின் எதிர்காலத்திற்காக அல்ல. அவை பொறாமை, பழிவாங்கல், வெறுப்பு மற்றும் பழைய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றார்.

கெடா மக்கள் தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்குமாறு நாங்கள் அழைக்கும்போது, கொள்கைகள் கொள்கைகளை எதிர்த்துப் போராடட்டும், திட்டங்கள் திட்டங்களை எதிர்த்துப் போராடட்டும் என்றார். நாம் ஒரு புதிய அரசியலைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் அரசியல் மிகவும் முதிர்ச்சியடையும். மக்கள் தங்கள் விருப்பத்தை – இன மற்றும் சமய உணர்வுகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here