ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய ஐந்து லம்போர்கினி கார் ஓட்டுநர்களுக்கு எதிராக போலீஸ் விசாரணை

கோத்தா திங்கி, ஜூலை 30:

செனாய்-டெசாரு விரைவுச் சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய ஐந்து பேர் கொண்ட லம்போர்கினி கார் ஓட்டுநர்கள் குழுவை போலீசார் இனங்கண்டுள்ளனர்.

“சம்பந்தப்பட்ட ஐந்து ஓட்டுநர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவோம்” என்று கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹுசின் ஜமோரா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஐந்து ஆண் ஓட்டுநர்களும் 44 முதல் 64 வயதுடையவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும்,இந்த சம்பவத்தின் 70 வினாடி வீடியோ போக்குவரத்து பிரிவுக்கு கிடைத்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹுசின் கூறினார்.

“செனாய்-தேசாரு விரைவு சாலையில் அவர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக” அவர் கூறினார்.

நேற்று இரவு 9.13 மணியளவில் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பதிவை பொதுமக்களில் ஒருவர் செய்ததாக ஹுசின் கூறினார்.

கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here