டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர், ஆகஸ்ட்டு 28ஆம் தேதி மீண்டும் விசாரணை

 

வாஷிங்டன்,ஆகஸ்ட்டு 4:

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 2024 தேர்தல் பிரசாரத்திற்கு நான் செல்வதை தடுக்கும் விதமாக தீய எண்ணத்துடன் முயற்சி நடைபெறுகிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க தலைநகரில் வெடித்த வன்முறை மற்றும் கிளர்ச்சியில் பங்கேற்ற 1,000 க்கும் மேற்பட்ட டிரம்ப் ஆதரவாளர்களும் திரண்ட அதே வாஷிங்டன், டி.சி., நீதிமன்றத்தில் அவரது கைது மற்றும் விசாரணை நேற்று நடந்தது.

விசாரணையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை மாற்றியமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கின் சாட்சியாகத் தெரிந்த எவருடனும் சட்ட வாயிலாக தொடர்பு கொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட மிகக் குறைந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஒரு அரசியல் எதிரியை துன்புறுத்துவதாகும். இது அமெரிக்காவில் ஒருபோதும் நடக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here