இரும்புக் கம்பியால் தாக்குவது போன்ற காணொளி தொடர்பில் ஒருவர் கைது

பிரிக்ஃபீல்ட்ஸ், ஆகஸ்ட்டு 4:

இரும்புக் கம்பியால் ஒருவரை தாக்குவது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு காணொளி தொடர்பில் ஆடவர் ஒருவரை பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான 1 நிமிடம் 26 வினாடிகள் கொண்ட காணொளி, நேற்று 03 ஆகஸ்ட் மதியம் 12.15 மணிக்கு ஒரு டுவிட்டர் கணக்கு உரிமையாளரால் பதிவேற்றப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இச்சம்பவம் தொடர்பாக 48 வயதான ஒருவரிடமிருந்து போலீசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பிரிக்ஃ பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் ஹாஜி அப்துல் ஷுகோர்
உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் 31 ஜூலை 2023 அன்று, காலை 9.55 மணிக்கு தாமான் நாவு டேசா கோலா பகுதியில் நடந்ததாகவும், அன்றைய தினமே 45 வயதான உள்ளூர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

இந்த வழக்கு வேண்டுமென்றே, ஆயுதத்தை பயன்படுத்தி காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 324 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

வைரலான இந்தக் காணொளி தொடர்பான எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும், இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-2297 9222, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-2115 9999 அல்லது ஏதேனும் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here