கெடாவில் டத்தோஶ்ரீ அன்வார் சூறாவளிப் பிரசாரம்

 

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 5:

எதிர்க்கட்சி வசமுள்ள தொகுதியை கைப்பற்றும் முயற்சியாக அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை கெடா மாநிலத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கெடாவின் காபந்து மந்திரி பெசாரான சனுசி முஹமட் நோரின் தொகுதியில் உள்ள விவசாயிகளை ஈர்ப்பது அன்வாரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

ஃபெல்டா டெலோய்த் தீமூர் குடியேற்றப் பகுதிக்கு வருகையளித்த பிரதமரை அவரை 3,000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

இத்தனைக்கும் மத்தியில் சனுசி போட்டியிடும் ஜெனரி தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறார்.

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஃபெல்டாவில் அன்வார் பிரசாரம் செய்தார்.

இதற்கிடையே கிராமப் பகுதிக்கு அன்வார் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை சனுசி கிண்டலடித்துள்ளார்.

வானத்தைப் பார்த்து வாயைத் திறந்ததுபோல தன்னைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சனுசி, நோன்புப் பெருநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் வருதா? என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏறக்குறைய 6,000 பேர் விருப்பக் குறியீடு அளித்துள்ளனர்.

ஃபெல்டாவில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய அன்வார், கடந்த ஜூன் மாதம் ஃபெல்டா குடியிருப்பாளர்களின் கடன்களை ரத்து செய்வதற்காக 8.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதை சுட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here