தாய்லாந்தில் சரக்கு ரெயில் – கார் மோதிய விபத்து; 8 பேர் பலி

 

பாங்காக், ஆகஸ்ட்டு 5:

தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் 8 பேர் பயணித்தனர்.

கார் அதிகாலை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில், கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here