ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பல நிறுவனங்கள் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அன்று விடுமுறை அளித்துள்ளதோடு தங்களது ஊழியர்களுக்கு டிக்கெட்டுகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
“கபாலி” திரைப்படதிற்க்கு பிறகு ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்க்கு பெரும் எதிர்பார்ப்புள்ளது. இதற்கு முன் இல்லாத அளவில் மிகப்பெரிய வசூலை பெறும் என்றும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




















