சையத் சாதிக்கை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் பாப்பாகோமோவுக்கு RM2,100 அபராதம்

காஜாங்:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானை அவமரியாதை செய்யும் முகமாக அவமதிக்கும் வார்த்தைகளை வெளியிட்டது மற்றும் காயப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், ‘பாபாகோமோ’ என்று அழைக்கப்படும் முன்னாள் அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் வான் முஹமட் அஸ்ரி வான் டெரிஸ்க்கு RM2,100 அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மாஜிஸ்திரேட் முஹம்மது நூர் ஃபிர்தௌஸ் ரோஸ்லி முன்னிலையில், 40 வயதான வான் முஹமட் அஸ்ரிக்கு எதிராக நியாயமான சந்தேகத்தை தற்காப்பு வழக்கின் முடிவில் எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர், நீதிபதி இந்த முடிவை எடுத்தார்.

“எனவே, குற்றம் சாட்டப்பட்ட வான் முஹமட் அஸ்ரி இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு RM100 அபராதம், தவறினால் ஒரு நாள் சிறை, அத்தோடு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, அவர் RM2,000 அபராதம், தவறினால் மூன்று மாதங்கள் சிறை” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here