நாளை 6 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 7:

நாளை ஆரம்ப வாக்களிப்பில் ஈடுபட்டுள்ள 6 மாநிலங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நாளை காலை சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானின் கடலோரப் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட்மலேசியா இணையதளம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிற்பகலில் மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு மற்றும் கெடாவில் கடலோரப் பகுதியில் ஓரிரு இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரெங்கானு மற்றும் கிளாந்தானைப் பொறுத்தவரை, மதியம் மற்றும் இரவில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளாந்தான், திரெங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதியை வாக்கெடுப்புக்கான நாளாக நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு நாளை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here