உயர்கல்விக்கு ‘நோ’ சொல்லாதீர்

எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளிவந்து பல வாரங்கள் ஆகிவிட்டன. அதேசமயம் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளும் அண்மையில் வெளிவந்துள்ளன. பள்ளிப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களுள் நீங்களும் ஒருவர் என்றால் இப்போதைக்கு உங்கள் மனவோட்டத்தில் எழும் கேள்விகள் இவைதான்:

இங்கிருந்து நான் எங்கு செல்வது? வேலை தேடவா அல்லது உயர்கல்வியைப் பயிலவா?

உடனடியாக பணம் ஈட்ட விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தினால் உங்களுள் பலர் கல்வியைத் தொடர விரும்பாததை நீங்களும் கேள்வியுற்றிருப்பீர்கள் என்பதை நானும் அறிவேன். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக முனைகின்றனர்.

நீங்கள் எதனைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்?

பொதுவாக இளைஞர்கள் உற்சாகமாகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்தவர்களாகவும் பெரிய கனவு கொண்டவர்களாகவும் இருப்பர். ஒது ஒரு சிறந்த விஷயம். அதேசமயம் பலதரப்பட்ட தேர்வுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது.ஒருவேளை நீங்கள் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு நான் வாழ்த்து கூறுகின்றேன். குறிப்பாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்து வெற்றிபெறச் செய்யும் வேலைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.ஆனால் உயர்கல்வி பயில்வதற்கான கதவை நீங்கள் நிரந்தரமாக மூடிவிடக்கூடாது என்றும் நான் எதிர்பார்க்கின்றேன். ஏன்? அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன.

  1. கல்விக்கு வாழ்க்கை முழுவதும் மதிப்புள்ளது.
  2. ஒரேசமயத்தில் வேலை செய்துகொண்டே கல்வி பயில முடியும்.

பள்ளிப் படிப்பை அண்மையில் முடித்தவர்களான நீங்கள் சுதந்திரமாகவும் புதிய திறன் – நுண்ணறிவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் இதுதான் சரியான நேரம். நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை வேலை தரலாம். ஆனால் உயர்கல்வி மூலம் நிறைவேறக்கூடிய அம்சங்களை அதனால் தர முடியாது.அதிலும் சரியான உயர்கல்விக்கூடத்தின் மிகச்சரியான தகுதிகூறுகள்தாம் உங்களின் எதிர்காலத்திற்கு மிக அவசியம். உதாரணத்திற்கு அதிகச் சம்பளம் பெறும் வேலை, பணி உயர்வு, இன்னும் சில விஷயங்கள் இதில் அடங்கும்.அடுத்ததாக OUM பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் நீங்கள் வேலை செய்துகொண்டே கல்வி கற்கவும் முடியும். OUM  பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க ஆன்லைன், பகுதி நேரப் பாடத் திட்டங்களை வழங்குகின்றது.கணினி வாயிலாகவே நீங்கள் மாணவர் பதிவில் இருந்து வகுப்புகளில் பங்கேற்பது, தேர்வு எழுதுவது என அனைத்தையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் முழுநேரமாகப் பணி புரிந்தாலும் உங்களால் இளங்கலைப் பட்டம் பெற முடியும். சுருக்கமாகச் சொன்னால் உயர்கல்விக்கு வேண்டாம் என்று சொல்லாதீர். அது ஓர் ஆக்கப்பூர்வமான முதலீடு.

– பேராசிரியர் டாக்டர் அஹ்மாட் இஸானி அவாங்

தலைவர்/ துணைவேந்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here