வானிலை சீராக இருந்தால், வரும் ஞாயிற்றுக்கிழமை (13 ஆகஸ்ட்) அதிகாலை 4 மணிக்கு சிங்கப்பூரில் Perseids எரிகல் பொழிவைக் (meteor shower) காண முடியும் எனக் கூறப்படுகிறது.
Perseids என்றால் என்ன?
Perseus நட்சத்திரக் கூட்டத்தின் அதே திசையில் எரிகல் பொழிவு வருவதால் அதற்கு Perseids என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இரவு வானில் தோன்றும் 24ஆவது ஆகப் பெரிய நட்சத்திரக் கூட்டம்.
Comet Swift-Tuttle என்கிற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற கழிவுகளைப் பூமி கடந்து செல்லும்போது, இந்த எரிகல் பொழிவு ஏற்படுகிறது
சிங்கப்பூரில் எங்கே காணலாம்?
வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேடு குறைவாக இருக்கக்கூடிய, திறந்தவெளி இடங்களில் காணலாம் என்று, Science Centre Observatory கூறியது.
Perseus நட்சத்திரக் கூட்டத்தைச் சுற்றி இருக்கும் இருட்டான பகுதிகளில் எரிகல் பொழிவைக் காணலாம் என்று அது தெரிவித்துள்ளது.
இவ்வாறு இருக்கையில், அடுத்த எரிகல் பொழிவை வரும் டிசம்பர் மாதம் மீண்டும் , சிங்கப்பூரில் பார்க்கலாம் என்றும், அந்த Geminids எரிகல் பொழிவு ஆகப் பெரிய, மிகப் பிரமாண்டமான ஒன்றாக இருக்கும் என்று Observatory தெரிவித்தது.
























