சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த நீங்கல்லாம் பேசுறீங்க!

டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி முன் வைத்த விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார். லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய டிஆர் பாலு, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையை மத்திய அரசு தாமதமப்படுத்துவது தொடர்பகா விமர்சித்தார்.

அதேபோல திமுக எம்பி கனிமொழி பேசுகையில், இந்தி திணிப்பதைவிட சிலப் பதிகாரத்தை படியுங்கள்.. உங்களுக்கு பாடம் இருக்கிறது என பாண்டியன் நெடுஞ் செழியன், கண்ணகி கதையை மேற்கோள் காட்டினார்; அதேபோல திரெளபதி கதை குறித்தும் சுட்டிக்காட்டினார். இன்று லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஆர் பாலு, கனிமொழி ஆகியோர் பேசிய ஒவ்வொன்றுக்கும் வரிக்கு வரி பதிலளித்தார்.

நிர்மலா சீதாராமன், செங்கோல் குறித்து பேசுகையில், காங்கிரஸ்தான் செங்கோலை தூக்கி எறிந்து மூலையில் போட்டது- அதனை மீட்டு உரிய இடத்தில் நிலைநாட்டியவர் பிரதமர் மோடி என்றார். அத்துடன் சிலப்பதிகாரம், திராவிடத்தை மறுக்கிறது; அந்தணர் எதிர்ப்பை மறுக்கிறது என்பதற்கு ம.பொ.சி.யின் பேச்சை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன்.

தமிழர் பாரம்பரியம், பண்பாடு தொடர்பாக பேசுகையில் காசி தமிழ் சங்கமம், தமிழர் புத்தாண்டு கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டினார். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காட்டு மிராண்டித்தனம் என சொல்லி தடை செய்தது காங்கிரஸ்; அதனை மீட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றார்.

இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கக் கூடாது என நீங்கள் திணிக்கிறீர்கள்; அதை வளர்க்க மற்றவர்களுக்கு அதிகாரம், திணிப்பு இருக்க கூடாதா என்றார். 1989-ம் ஆண்டு தமிழ் நாடு சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த கட்சி திமுக இன்று திரெளபதி கதை பற்றி பேசலாமா எனவும் அன்றைய சம்பவங்களை சுட்டிக் காட்டி விமர்சித்தார் நிர்மலா சீதாராமன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசால் கடன் வாங்கி கட்டப்படுகிறது; தமிழ் நாடு அரசுக்கு ஒரு சுமையும் இல்லை என்றும் விவரித்தார் நிர்மலா சீதாராமன். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமானின் ஒவ்வொரு விளக்கத்துக்கும் திமுக, காங் கிரஸ், என்சிபி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிநடப்பும் செய்தனர். இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here