அடித்து நொறுக்கும் ஜெயிலர் பட வசூல் சாதனை

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் 3500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பல்வேறு மொழி நடிகர்களும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. தமிழ்நாட்டில் ஜெயிலர் ரிலீஸான முதல் நாள் ரூ.29.46 கோடியும், இரண்டாம் நாள் ரூ.20.25 கோடியும் வசூலித்துள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.49.71 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் 2023-ம் ஆண்டில் வெளியான படங்களின் வசூல் சாதனையில் ‘ஜெயிலர்’ படம் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் நடித்த வாரிசு படத்தின் வசூலை முந்தி ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ஜெயிலர் படம் முதல் நாள் ரூ.95.78 கோடியும், 2-ஆவது நாள் ரூ.56.24 கோடியுமாக மொத்தம் ரூ.152.02 கோடி வசூல் செய்து உள்ளது.

இன்று 3 வது நாள் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்க கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here