அமெரிக்காவின் ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது

ஹவாயில் பேரழிவு தரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக மௌய் (Maui) மாகாண அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மரணங்கள் அனைத்தும் திறந்த வெளியில் நிகழ்ந்ததாகவும், கட்டிடங்களில் அல்ல என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், காட்டுத்தீ ஏற்பட்டவுடன் மக்களை எச்சரிக்க, எச்சரிக்கை ஒலி ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பது உட்பட, மாநிலத்தின் நடவடிக்கைகளை விரிவான மதிப்பாய்வு செய்ய ஹவாய் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஹவாய் காட்டுத்தீயை ஒரு “பெரிய பேரழிவு” என்று அறிவித்து, ஆகஸ்ட் 8 முதல் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில மற்றும் உள்ளூர் மீட்பு முயற்சிகளுக்கு துணைபுரிய கூட்டாட்சி உதவிக்கு உத்தரவிட்டார்.

ஜோ பிடன் அறிவித்த உதவியில் தற்காலிக வீடுகள் மற்றும் வீட்டு பழுதுபார்ப்புகளுக்கான மானியங்கள், காப்பீடு செய்யப்படாத சொத்து இழப்புகளை ஈடுகட்ட குறைந்த விலை கடன்கள் மற்றும் மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் பேரழிவின் விளைவுகளிலிருந்து மீள்வதற்கு உதவும் பிற திட்டங்கள் ஆகியவை அடங்கும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here