சந்தையில் வாடிக்கையாளர் முன்னிலையில் சிறுநீர் கழித்த மீன் வியாபாரி- வைரலாகும் காணொளி

பேராக்:

பேராக் பாகான் செராயிலுள்ள ஒரு சந்தையில், மீன் வியாபாரி ஒருவர் தனது கடை முகப்பிடத்திற்கு பின்னால் நின்றவாறு சிறுநீர் கழித்த கீழ்தரமான செயல் தொடர்பான சிசிடிவி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இவ்வாறு சந்தையில் சுகாதாரமற்ற , அருவருக்கத்தக்க செயலை செய்த கடைக்காரரிடம் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தட்டிக்கேட்டபோது, கடையில் மாற்றிவிடுவதற்கு ஆள் இல்லாததாலேயே அவர் அந்த இடத்தில் சிறுநீர் கழித்ததாக, தனது செயலை அவர் நியாயப்படுத்தினார்.

குறிப்பிட்ட அந்த வியாபாரி அவ்வாறு சிறுநீர் கழித்தது முதல் தடவையல்ல. அவர் இரண்டு தடவை அவ்விடத்தில் சிறுநீர் கழித்ததை அந்த காணொளி காட்டுகிறது.

இந்நிலையில் தான் செய்தது தவறு என்றும், இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என்றும் அவர் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் சந்தையில் இவ்வாறு சுகாதாரமற்ற, முகம்சுளிக்கும் செயலலை செய்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here