இயங்கலை தீங்குக்கு எதிராகப் போராடுங்கள்


இயங்கலை தீங்குகளுக்கு எதிராக பொது மக்களுக்கு அதிகாரமளிக்க இணையம், சமூகவலைத்தளங்களில் செய்தி, தகவல் பரப்பும் செயல்முறையை விரைவுபடுத்த உதவுகின்றன. மலேசியர்கள் தற் போதைய சூழ்நிலையைப் மேம்படுத் திக் கொள்ளவும், குடும்பத்தினர், நண்பர்களி டையே உறவுகளை வலுப்படுத்தவும் இது முக்கிய ஊடகமாக செயல்படுகிறது.

​இருப்பினும், இந்த தளங்கள் மோசடி செய்பவர்களுக்கு பயனீட்டாளர்களுடன் இணைவதற்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. இது பெரும் தீங்கை விளைவிக்கும்.

​இயங்கலை தீங்கிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சின் (K&KOMM) கீழ் உள்ள ஓர் அமைப்பான மலேசிய தொடர்பு, பல் லூடக ஆணையம் (MCMC) இணைய அடிப்படையிலான தயாரிப்புகள் அல்லது சேவை களைப் பயன்படுத்தும்போது உடல், உணர்ச்சி, நிதித் தீங்குகளிலிருந்து தனிநபர் களைப் பாதுகாக்க பல வழிகாட்டுதல்களையும் முயற்சிகளையும் கொண்டு வந்துள்ளது.

​இணைய அடாவடித்தனம், தவறான தகவல் போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்களி லிருந்தும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

​சமூகவலைத்தளம் என்பது இணையம் மூலம் பல்வேறு சமூக ஊடக பயன்பாடுகளில் இணைக்கப்பட்ட மக்களிடையே பல்வேறு வகையான அல்லது தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு கருவியாகும். தனிநபர் – சமூக வாழ்க்கை, வாணி பம் ஆகியவற்றில் சமூக ஊடகங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இது நேர்மறை, எதிர்மறை விளைவுகளைக் கொண்டுள்ளது.

​சமூக ஊடகங்கள் அதன் பயன்பாட்டில் குழந்தைகள், பதின்ம வயதினரின் ஈடு பாட்டை அதிகரித்து அவர்களின் சமூக, நன்னெறிகளைப் பாதிக்கிறது. இங்கிலாந்தில் சமூக ஊடகங்களில் குழந்தைகளின் நேரம் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளில் முக்கால்வாசி குழந்தைகள் சமூக ஊடக சுயவிவரங் களைக் கொண்டுள்ளதோடு சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.​

​இணையம் என்பது மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைத்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி. கடந்த காலங்களில் இருந்து வந்த கடிதப் பரிமாற்றம் மாறி விட்டது. இணையத்தில் வாணிபத்தை நேரடியாகச் செய்யக்கூடிய மின்னஞ்சல் பயன் பாடுகளின் இருப்புடன் இந்த நிலைமை மனித வாழ்வில் ஒரு முன்னுதாரண மாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பல்வேறு விவகாரங்கள் வியர்வை சிந்தாமல் நியாயமான செலவுகளுடன் விரைவாகவும் எளிதாகவும் முடிகிறது.

​இன்றுவரை, இணையம் என்பது தொடர்பு சேவைகள், வாணிபம், கல்வி போன்ற பல் வேறு தொழில்களின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இது உலக அளவில் அடைய மு டியாத ஒரு சேவையாக மாறியுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு தனிமனிதனின் தயாரிப்பு நல்லதாகவும் கெட்டதாகவும் அமைந்து விடுகிறது.

​ஒவ்வொரு தனிமனிதனும் தாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வசதிகள் தங்களுக்குப் பலனளிக்குமா, வேறுவிதமாகப் பயன்பெறுமா என்பது அவர்களைச் சார்ந்தது. எனவே, இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடையும் வழிகளைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதில் பெற்றோரின் பங்கு என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது பொருத்தமானது.

​இணையத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் பெற்றோரின் பங்களிப்பில் இளைஞர்களுக்கு (உங்கள் குழந்தைகள்) வழிகாட்ட நீங்கள் என்ன செய்யலாம்:

​- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நேரங்களைப் பற்றி கேட்கவும் அல்லது விவாதிக்கவும். பெரும்பாலும், பதின்மவயதினர் இயங்கலையில் செலவழிக்கும் நேரங்கள் அவர்களின் கண்களைத் திறக்கும். பலர் முழுநேர வேலைக்குச் சமமான அளவில் இதற்காக நேரத்தை செலவிடுகின்றனர்.

​- அவர்களுடன் அமர்ந்து அவர்கள் வலம் வந்த அகப்பக்கங்களைக் வலம் வரச் சொல்லுங்கள். இது அருவருப்பாக இருக்கலாம். ஆனால், உண்மையில் பிள்ளைகளுடன் அமர்ந்து இருவரும் அவர்கள் பதிவேற்றம் செய்தவற்றைப் பாருங்கள். அவர்களுடன் நீங்கள் பார்ப்பதை ஒன்றாக அமர்ந்து விவாதிக்கவும்.

– பதிவேற்றம் செய்தவற்றின் தோனி, உள்ளடக்கம், அவற்றின் தன்மையைப் பற்றி அவை என்ன பரிந்துரை செய்கிறது என்பதை விளக்கவும். யாரோ ஒருவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் பதிவேற்றங்களைப் பார்த்தால் என்ன முடிவுக்கு வரலாம் என்றும் கேளுங்கள்.

– முதலாளிகள், பயிற்சியாளர்கள், பயிற்றுநர்கள், வழிகாட்டிகள் தங்கள் தளங்களை எப்படிப் பார்க்கலாம் என்பது பற்றி விவாதிக்கவும்.

– படித்த பிறகும் சமூக ஊடகங்களில் இடுக்கையிட்ட பிறகும் தங்களுக்குள் ஓர் அணுகுமுறை மாற்றத்தை அவர்கள் எப்போதாவது கவனித்திருக்கிறார்களா என்று அவர்களிடம் கேளுங்கள். நீங்கள், அல்லது அவர்கள் எதிர்மறையான அணுகுமுறை அல்லது மனக்கிளர்ச்சியான எதிர்வினைகளை இயங்கலையில் எவ்வாறு அனுபவிக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்கவும்.

– அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கவும். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் எனது நற்பெயரை பாதுகாக்கும் வகையில் நான் அதில் பதிவேற்றம் செய்வேன் என பிள்ளைளை உறுதி கூறச் சொல்லுங்கள்.
​தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே. குழந்தைகளை ஒன்றாக வேலை செய்வதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும், ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். ​

​எனவே, குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய கல்வியை அவர்க ளுக்கு வழங்குவதில் பெற்றோர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். பள்ளியில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையைப் போலவே, பெற்றோரும் இணையத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை நன்கு புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதில் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பார்கள்.​

​உதாரணத்திற்கு, எந்த இணையதளங்கள் மோசமானவை, எது உலா வருவதற்கு ஆபத் தானவை என்பதை நன்கு அறிவதுடன் இன்று சமூக ஊடகங்களில் உலா வருவதன் நன்மை, தீமைகளையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

​இணையம் என்பது எதிர்காலத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும் ஓர் அங்கமா கும். எனவே, இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப அறிவு உட்பட எதிர்காலத்தில் இணையத்தில் சிறந்து விளங்க சிறு வயதிலிருந்தே அது தொடர்பான கல்வி அவசியமாகும்.​

​உதாரணத்திற்கு, சமூக ஊடகங்களில் எதையாவது பகிரும் போது, அது நமது தனிப் பட்ட தகவல்களின் விவரங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் அது இணைய மோசடிகளுக்கு குறிப்புப் பொருளாக இருக்கலாம்.​

​மற்றொரு நெறிமுறை என்னவென்றால், உண்மை என்பதில் உறுதியாக இல்லாத ஒன் றைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. காரணம் அது மோசமான, நாம் எதிர்பாராத ஒன்றுக்கு தூண்டுதலாக இருக்கலாம். இணையத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர் வதும் பெற்றோர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். காரணம் குழந்தைகள் அறி யாத தளங்கள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்டதகவல்களைப் பகிர்ந்தால் அவர் களுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது.​

​இதன் விளைவாக, தந்திரங்களை எளிதில் நம்பாமல் விழிப்புடன் இருப்பதற்கு பின் பற்ற வேண்டிய நெறிமுறைகளை பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் இணையத்தின் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்த முடியும்.

​முடிவில், இணையதள பயன்பாட்டிலிருந்து பயனடைய குழந்தைகளுக்கு கல்வி கற் பதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இணையம் இன்றைய வாழ்வில் இன்றியமையாதது என்பதை மறுக்க முடியாது. எனவே, இன்றைய இளம் தலை முறையினர் இணையதளச் சேவைகளைப் பயன்படுத்துவதில் கல்வியறிவு பெற்றவர் களாக இருப்பதை பெற்றோர் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதன்வழி தற்போது நாட்டில் மோசமாகி வரும் இணைய துஷ் பிரயோகம், இணைய மோசடி போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

​பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நெருக்கமானவர்கள் தாங்கள் என்பதை பெற்றோர் உணர வேண் டும். இணையத்தை ஒரு நேர்மறையான சமூகமாக உருவாக்கி கண்ணியம், அற நெறிக்கான நெறிமுறைகளுக்காகப் போராடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here