நாடாளுமன்றத்தின் புதிய தலைமை நிர்வாகியாக முகமட் ஜமானி நியமனம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 16:

மலேசிய நாடாளுமன்றத்தின் புதிய தலைமை நிர்வாகியாக டத்தோ முகமட் ஜமானி முகமட் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை பாதுகாப்பு அமைச்சகத்தின் , நிதிப் பிரிவு செயலாளராக பணியாற்றிவந்த இவரது புதிய நியமனம் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக, மலேசிய நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை நாடாளுமன்றத்தின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்துவந்த டத்தோ நோர் யஹாட்டி அவாங், மலேசியாவின் ஒருமைப்பாட்டுக் கழகத்தின் (IIM) தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக, அவருக்குப் பதிலாக முஹமட் ஜமானி நியமிக்கப்படுவார் என்றும் அது அறிவித்தது.

பொது சேவைத் துறையின் இயக்குனர் ஜெனரல் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமட் நேற்று புத்ராஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் குறித்த நியமனக் கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here