எல்மினா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு பேரரசர் வருகை

ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 17:

இன்று பிற்பகல் ஷா ஆலாமில் உள்ள எல்மினா குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள கெத்ரி நெடுஞ்சாலையில், லங்காவியில் இருந்து சுபாங்கிற்கு பயணம் செய்த ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை, மாட்சிமை தங்கிய பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று பார்வையிட்டார்.

மாலை 5:40 மணிக்கு சம்பவ வந்த அவர், சம்பவம் குறித்து வினாவினார்.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உரையாடலிலும் ஈடுபட்டார்.

முன்னதாக, பிற்பகல் ஷா ஆலாமில் உள்ள எல்மினா குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள கெத்ரி நெடுஞ்சாலையில், லங்காவியில் இருந்து சுபாங்கிற்கு பயணம் செய்த ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

அதில் எட்டு பேர் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என்றும், ஏனைய இருவர் விமானம் விபத்துக்குள்ளான பகுதி வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற பொதுமக்களாவர் என சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் உறுதிப்படுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here