இங்கிலாந்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே கடந்த 2019ம் ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். எனினும், அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார்.

அவர் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தது. எனினும், பிரதமர் அலுவலகம் இந்த வேண்டுகோளை நிராகரித்தது. அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்றும், ஜான்சன் முன்பே பதவி விலகி விட்ட சூழலில் இந்த நடவடிக்கை, நாடாளுமன்ற நேரத்தினை மதிப்புடன் பயன்படுத்திய ஒன்றாக இருக்காது என தெரிவித்து இருந்தது.

எனினும், ஜான்சன் அவராக முன்வந்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்து அதற்கான பணிகள் நடைபெற்றன. இதில், நேற்றிரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய விவாதம் அந்நாட்டின் நாடாளுமன்ற வலைதளத்தில் ஒலிபரப்பப்பட்டது. இதில், அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், 238 வாக்குகளை பெற்று வாக்கெடுப்பில் ஜான்சன் அரசு வெற்றி பெற்றது.

இதனால், இங்கிலாந்தில் பொது தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு உள்ளது. அதேநிலையில், இந்தியா வம்சாவளியான எம்.பி. ரிஷி சுனாக் 3வது சுற்றில் அதிக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். உறுப்பினர் டாம் டுகெந்தத் வெளியேறியுள்ளார். இதனால், புதிய பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனாக் உள்ளிட்ட 4 பேர் மீதமுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here