இந்தியாவின் உ.பி. மாநில முதல்வர் காலை தொட்டு வணங்கிய நடிகர் ரஜினிகாந்த்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 500 கோடி நெருங்கி வருகிறது.

இதனிடையே, இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.

வரவேற்ப்பதற்க்காக காத்திருந்த யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கினார் நடிகர் ரஜினிகாந்த். இச்சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பேசும் பொருளாகவும், அதிர்வலையையும் ஏற்ப்படுத்தியுள்ளது. மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here