புத்ராஜெயா, ஆகஸ்ட்டு 20:
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்டு 23 வரை ஈரானுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின் போது, ஜாம்ப்ரி ஈரானிய தலைவர்களை மரியாதையுடன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இரு நாட்டு அமைச்சர்களும் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, உள்ளூர் வணிகத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. , ”என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரான் உட்பட அனைத்து நாடுகளுடனும் மலேசியா இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த பயணம் பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சகம் மேலும் கூறியது.
ஈரான் மலேசியாவின் எட்டாவது பெரிய வர்த்தக பங்காளி என்பது குறிப்பிடத்தக்கது.