புதிய கம்போடியப் பிரதமராக ஹுன் மானெட்

நோம்பென்:

கம்போடியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹுன் மானெட்டுக்கு கம்போடிய அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் ஒப்புதலை வழங்கியுள்ளனர்.

மேலைநாட்டில் படித்த ஹுன் மானெட்டுக்கு, 45, ஆதரவாக அவரின் கம்போடிய மக்கள் கட்சி (சிபிபி) இருக்கும் நிலையில், ஜூலையில் நடந்த தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்படவில்லை என்ற குறைகூறல் எழுந்தது.

இருப்பினும் அத்தேர்தல் நியாயமாகவும் சுதந்திர உரிமையுடனும் நடத்தப்பட்டதாக அமைச்சரவையில் பேசிய ஹுன் மானெட், சிபிபியின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அமைதி, பொருளியல் வளர்ச்சி, மேம்பட்ட உள்கட்டமைப்பு, அரசாங்க ஊழியர்களுக்கும் ஆடைத் தொழில் ஊழியர்களுக்கும் ஊதிய அதிகரிப்பு போன்றவை அவற்றில் அடங்கும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, பேரழிவு விளைவித்த பல்லாண்டு கால உள்நாட்டுப் போரிலிருந்து மக்களின் அமைதி, வளர்ச்சி, மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுத்த ஒரு சகாப்தத்திற்கு கம்போடியாவை வழிநடத்திய தம் தந்தையையும் மூத்த அரசியல் தலைமுறையினரையும் ஹுன் மானெட் பாராட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here