சைபர்ஜெயா:
ஆரோக்கிய உணவுத்துறையில் DXN நிறுவனம் அனைத்துலக அளவில் தனித்துவத்துடன் முத்திரைப் பதித்து வருகிறது. டிஎக்ஸ்என் ஹோல்டிங்ஸ் கார்ப்பரெட் நிறுவனம் முக்கிய வர்த்தக முதலீட்டுத் துறைகளில் தொடர் சாதனைகளைப் படைத்து வருகிறது என்று அதன் செயல்முறைத் தலைவரும் நிறுவனருமான டத்தோ லிம் சியோவ் சின் கூறினார்.

சிறந்த தொழில்நுட்பம், உலக ளாவிய செயல்பாடுகள் அனைத் தும் DXN நிறுவனத்தின் அபார வெற்றியின் அடித்தளமாக விளங்குகின்றன. ஒவ்வொரு காலகட்ட த்திலும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்தி வரு கிறது.
உலகின் விநியோக வரிசையில் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த நிர்வாகக் குழுவினர் அதன் வர்த்தக வாய்ப்புகளை உலகளாவிய அளவில் அறிமுகம் செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் நேரடி விற்பனை மையங்களை DXN கொண்டிருக்கிறது.

கானொடெர்மா எனப்படும் காளானில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்துலக ரீதியில் கடுமையான போட்டியை எதிர்நோக்கி இருந்தாலும் இதன் தனித்துவம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றியைத் தந்து வருகிறது என்று டத்தோ லிம் குறிப்பிட்டார்.
ஆகக்கடைசியாக ஆரோக்கிய உணவுத் துறைகளில் பரோட்டா, காளான் பெர்கர் போன்ற புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் DXN நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் வருமானம் ஈட்டுவதற்குரிய சிந்த வாய்ப்புகளை வழங்குகிறது. நேர்த்தியான தயாரிப்புகள், அதன் தயாரிப்பின் முத்திரையாகப் புகழ்பெற்றிருக்கிறது.

சவால்மிக்க வாணிப உலகில் புதிய பரிணாமங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதோடு அதன் செயல் திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வருவதாக, சைபர்ஜெயா DXN தலைமையகத்தில் நடைபெற்ற அதன் 27ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ லிம் தெரிவித்தார்.
-M.Anba -MO Reporter (Kajang)























