ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பது பழமொழி. அந்த வகையில் இன்று ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதருக்கு முதல் கும்பாபிஷேகம் முத்துகுமார சிவச்சாரியார் தலைமையில் ஸிவகமி கோவிந்தனின் சிறப்பு வருகையோடு பக்தர்கள் புடைசூழ மிகவும் விமரிசையாக நடந்தேறியது.
40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ருத்ராதேவி சமாஜம் கடந்த 16 ஆண்டாக ஜாலான் டுக்கு, கம்போங் காசிப்பிள்ளையில் இயங்கி வருவதாக தலைவர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். 3 நாட்கள் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதாக முத்துகுமார சிவாச்சாரியர் தெரிவித்தார்.
இன்றைய கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சமாக நமது குருவான ஜெகநாதர் சுவாமியுடன் இருந்தவரும் சித்ரகுப்த அடிகளாரின் பக்தருமான சுவாமி கோவிந்தன் அவர்களின் வருகையாகும். கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற பொருளதவி வழங்கிய நல்லுளங்களுக்கும் உடன் இருந்து உதவிய அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி மலர்கள் உதிர்தாக்கட்டும்.























