இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முஸ்லிம் உட்பட இதர மதப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அதுதான் தவறு.

கோலாலம்பூர்,

மஇகா அடிக்கல் நாட்டு விழாவை மக்கள் ஓசை நேரலையாக ஒ ளிபரப்புச் செய்த போது அந்த காணொளி நாடுமுழுவதும் பெரும் வைரலானது. இந்த பதிவை இடும் இந்த நேரத்தில் அந்த காணொளியை 825,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ள தோடு லடசக்கணக்கான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன

திங்கட்கிழமை நடைபெற்ற மஇகாவின் இரட்டைக் கோபுரப் புதிய கட்டட அடிக்கல்
நாட்டு விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டதை அக் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தற்காத்துப் பேசி யுள்ளார்.

ஆனாலும் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் சமயச் சடங்கு கள் ஒரே நேரத்தில் மேற் கொள்ளப்படவில்லை. குறிப் பிட்ட விதிகளுக்கு ஏற்பவே அந்தப் பிரார்த்தனைகள் முறை யாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்நடவடிக்கையானது இந்நாட்டில் எந்தவொரு மதத்தையும் தழுவியிருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மஇகா பொதுவானது என்பதை தெளிவாகக்காட்டுகிறது என் பதை எம்.சரவணன் சுட்டிக் காட்டி யுள்ளார்.

பல மதங்களைச் சேர்ந்தவர்கள் மஇகாவின் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே அந்த அடிக் கல் நாட்டு விழா இந்து மதச் சடங்குகளை மட்டுமே செய்வது ஏற்புடைய தாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட சமயச் சடங்குகள் மட்டுமே செய்யப் பட்டால் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்களைத் தழுவியிருக்கும் மஇகா உறுப்பினர்கள் எப்படிக் கலந்துகொள்வார்கள் எனவும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பினார்.

அதிலும் இந்த அடிக்கல்  நாட்டு விழாவில் முஸ்லிம் உட்பட இதர மதப் பிரார்த்த னைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அதுதான் தவறு என நான் நம்புகிறேன். எனவே பொதுமக்கள் குறிப்பாக இந்த அடிக்கல் நாட்டு விழாவில் திருப்தி கொள்ளாத நெட்டிசன்கள் தங்களின் குறுகிய சிந்தனையில் இருந்து வெளிவர வேண்டும்.

மலேசியாவில் பல இனங்கள் – பல மதங்கள் உள்ளன. அரசியல் கட்சி என்ற முறை யில் அனைத்து மத – இன உரிமையையும் மஇகா காக்க வேண்டும் என ங்ரவணன் கூறியதாக மலேசியா கினி ஊடகம் ஙெ்ய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கம்பம் பீர்முகம்மது, பாதிரியார் ஜொனதன் ஆகியோர் முறையே இஸ்லாமிய – கிறிஸ்துவ மதப் பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here