மலாக்கா மாநில ஆளுநரின் 74ஆவது பிறந்த நாளில் 1042 பேருக்கு விருதுகள்

மலாக்கா –
லாக்கா மாநில ஆளுநர் துன் ஸ்ரீ செத்தியா டாக்டர் ஹஜி முகமட் அலி முகமட் ருஸ்தாம் அவர்களின் 74 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம், இராணுவ படையினரின் 14 மரியாதை குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது.

ஆயேர்குரோ ஸ்ரீ நெகிரி வளாகத்தில் நடைபெற்ற அரச மரியாதை சடங்குகளுக்கு பின்பு அரசியல் , அரசு சாரா இயக்கங்களில் சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இம்மாநிலத்தில் வறுமை முழுமையாகத் துடைத் தொழிக்கபடவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அதனை குறைப்பதற்காகவாது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் வருமானத் திட்டத்தை மாநில அரசும் பின்பற்றி ஏழ்மையைத் துடைத்தொழிப்பதில் கவனம் செழுத்த வேண்டும் என்று அவர் வழியுறுத்தினார்.

விவசாயம், உணவு வணிகங்கள் மற்றும் சேவைத்துறைகள் ஆகியவற்றின் மூலம் வறுமையை ஒழிப்பதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அலி ருஸ்தாம் வலியுறுத்தினார்.

பிறந்த நாள் கொண்டாடத்தை முன்னிட்டு 1042 பேருக்கு மூன்று வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கபடவுள்ளது. முதல் பிரிவில் 352 பேர் விருதுகளையும் பதக்கங்களையும் ஆளுநரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மலாக்கா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அபி ரவூப் டார்ஜா உத்தாமா ஸ்ரீ மலாக்கா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது அரச மலேசிய காவல் படை தலைவர் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ராசாரூடின் பின் ஹூசைன் டார்ஜா கிமிலாங் விருது வழங்கி சிறப்பிக்கபட்டது. ஸ்ரீ பாண்டி உணவக உரிமையாளர் தொழில் அதிபர் டத்தோ அழகர்சாமிக்கு உயரிய டார்ஜா பக்குவான் ஸ்ரீ மலாக்கா எனும் டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ம.இ.கா மற்றும் பிகேர் ,ஜசெக மற்றும் அரசு சாரா இயக்கங்களில் சிறப்பாக சேவையாற்ற பலருக்கு டி.எஸ் எம். பிஜேகே, பி.எம் விருது வழங்கப்பட்டது . மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் காடேக் சட்ட மன்ற உறுப்பினருமான பி.சண்முகம் விருதுப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here