காஜாங்-
அண்மையில் சீனா, வூனான் சாங்சாவில் நடைபெற்ற 2023 அனைத்துலக TVET கல்வி – பயிற்சி, கண்காட்சி அனைத்துலக உச்சநிலை மாநாட்டில் மலேசிய TVET நிபுணத்துவத்திற்கு ஓர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தெங்காரா நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி மான்ட்ஸ்ரீ நசிப் அமைப்பின் தலைமைச் செயலாளர் முகமட் ரிஸான் ஹசான் ஆகிய இருவருக்கும் தேசிய திறன்வாய்ந்த தொழிலாளர் அமைப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

இவ்விருவரும் International Expert of South China Belt and Road Vocational Education Alliance in Water Resources and Electric Engineering அமைப்பில் இவ்விருவரும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனமானது மலேசியாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய கௌரவமாகும்.
2024ஆம் ஆண்டு மலேசியா – சீனா இடையிலான 50 ஆண்டுகள் தூதரக உறவுக்கு இது மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. மலேசிய TVET தொழில்கல்வி, தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு ஓர் அங்கீகாரமாகவும் இந்த நியமனம் அமைகிறது.
இந்த உச்சநிலை மாநாட்டில் மலேசியாவில் TVET எனப்படும் தொழில்நுட்பம், தொழில்கல்வி, பயிற்சி மறுவடிவமைப்பு எனும் தலைப்பில் ஹாஜி மான்ட்ஸ்ரீ கட்டுரை சமர்ப்பித்தார்.









