T751 பயணத் தடத்தில் Rapid பஸ் சேவை நிறுத்தம்

கோலாலம்பூர்-
RapidKL பஸ் T751 (ஷா ஆலம் செக்ஷன் 7 – யுஐடிஎம் ஷா ஆலம்) சேவை 2023 ஆகஸ்டு 28ஆம் தேதி (இன்று) முதல் நிறுத்தப்படுகிறது என்று Rapid Bus Sdn. Bhd. நிறுவனத்தின் ஓர் அறிக்கை தெரிவித்தது.

இதற்கு மாற்றாக T751 பயணத் தட பயனீட்டாளர்கள் SA04 (ஷா ஆலம் செக்ஷன் 17 – ஷா ஆலம் மருத்துவமனை) ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.

செக்ஷன் 7இல் உள்ள வர்த்தக மையத்திற்கும் ஷா ஆலம் யுஐடிஎம் பல்கலைக்கழகத்திற்கும் இந்தப் பஸ் சேவை இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here