அலோர் காஜா:
சமீபத்தில் முகநூலில் Munchkin breed வகை பூனையை வாங்குவதற்கு விரும்பிய ஆசிரியை ஒருவர் மோசடியில் சிக்கி RM37,750 பணத்தை இழந்தார்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று, முகநூலில் பார்த்த விளம்பரத்தினடிப்படையில் 39 வயது ஆசிரியை ஒருவர் விளம்பரதாரரை தொடர்புகொண்டு, RM600 விலைக்கு ஒரு பூனையை வாங்க முன்பதிவு செய்தார், அதற்காக அவர்கள் கொடுத்த வாங்கி கணக்கிற்கு RM300 டெபாசிட் செய்துள்ளார்.
அதன் பின்னர் ஜகார்த்தாவிலிருந்து பூனையை வரவழைக்க, வெளிநாட்டு விமானச் செலவுகள் மற்றும் பூனை இறக்குமதி உரிமம் மற்றும் “தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறையின் உரிமம், ஆகியவற்றை பெறுவதற்கு மொத்தமாக RM37,750 செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பலால்
அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மோசடிக்கு கும்பல் கூறிய பணத்தை ஆசிரியை செலுத்தினார், ஆனால் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று அலோர் காஜா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.










