அடுத்தடுத்து நடத்தப்படும் ஆக்கப்பூர்வமான போட்டி – நிகழ்ச்சிகள்

இவ்வாண்டு Mind Competitions 2023, 17th Malaysia Festival of the Mind (MFotM) இன்னும் பல உற்சாகமிகு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளதன் வழி Malaysia Mental Literacy Movement (MMLM), Universiti Tunku Abdul Rahman (UTAR), Tunku Abdul Rahman of Management and Technology தரப்புகள் மீண்டும் சமூக முன்னெடுப்புகளில் களம் இறங்கியுள்ளன.

Kuala Lumpur Engineering Science Fair (KLESF) உடனான கூட்டமைப்பின் மூலம் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து வயது நிலையிலான மலேசியர்கள் மத்தியில் சிறந்த விழிப்புணர்வை உருவாக்குவதன் வழி யோசிக்கும் திறன், புத்தாக்கத் திறன்களை மேலோங்கச் செய்ய இந்த நிகழ்ச்சிகள் வழி வகுக்கின்றன.

மலேசியர்கள் மத்தியில் மனவலிமையை மேம்படுத்துவதற்கான பல்வேறு பயிற்சி களும் வழிமுறைகளும் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக அறிமுகப்படுத்தப் படுகின்றன.

 

Mind Competitions 2023 இந்நிலையில் 14ஆம் ஆண்டாக Mind Competitions 2023 போட்டி நடத்தப்படுகின்றது. இப்போட்டியானது செப்டம்பர் 9ஆம் தேதி யுதார் பல்கலைக்கழகத்தின் சுங்கை லோங் வளாகம், கம்பார் வளாகம் மட்டுமன்றி துங்கு அப்துல் ரஹ்மான் மேலாண்மை – தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பினாங்கு வளாகத்திலும் நடத்தப்படுகின்றது.

இதில் நினைவாற்றல், மனக்கணிப்பு உள்ளிட்ட முக்கிய 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். மொத்தமாக 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப் படுகின்றன.

சிறார்கள் தொடங்கி மாணவர்கள், உயர்கல்விக்கூட மாணவர்கள், வேலை செய்பவர் கள், பணி ஓய்வு பெற்றவர்கள் என அனைத்து நிலையிலான வயது தரப்பினரும் இப் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு www.utar.edu.my/mmlm என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். அதோடு mmlm@utar.edu.my என்ற மின்னஞ்சலுக்கும் தகவல் அனுப் பலாம். இல்லையென்றால் 03-90860288 (இணைப்பு 810) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

17th Malaysia Festival of the Mind இந்த நிகழ்ச்சியானது Kuala Lumpur Engineering Science Fair (KLESF) தரப்புடனான கூட்டமைப்போடு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைன்ஸ் அனைத் துலகக் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மன நிலைத்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சிக்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here