RMAF பயிற்சியாளர்களை கொடுமைப்படுத்துதல் குறித்த விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளன

குவாந்தான் விமான தளத்தில் ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) பயிற்சியாளர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் விசாரணை இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் காவல்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று விமானப்படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் அஸ்கர் கான் கோரிமான் கான் கூறினார்.

இன்று விமானப்படை அகாடமியில் (ATU) சந்தித்தபோது, ​​விசாரணை முடிவடையும் என்பதோடு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பொதுவாக மலேசிய ஆயுதப் படைகள் (MAF), குறிப்பாக RMAF அதன் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கொடுமைப்படுத்துதல் பிரச்சினைகளில் சமரசம் செய்யாது என்று அவர் வலியுறுத்தினார்.

பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறுகையில் மே மாதம் 10க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். இதில் குற்றம் செய்ததாகக் கூறப்படும் ஆறு பயிற்சியாளர்கள் மற்றும் ஐந்து பாதிக்கப்பட்டவர்கள் உட்பட என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here