கின்னஸ் சாதனைக்காக ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் உருவாகி இருக்கிறது. படத்துக்கு `ஓங்கி அடிச்சா ஒன்றரை டண்ணு வெயிட்டு டா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இது ‘சிங்கம்’ படத்தில் அதன் நாயகன் சூர்யா பேசும் அதிரடி வசனமாகும்.
ஜி.சிவா படத்தை இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
“ஒரு நடிகர் மட்டும் நடித்துள்ளபடங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. ஆனால் அத்தகைய முயற்சியில் முழுக்க வணிக அம்சங்களுடன் களமிறங்கி உள்ளோம். அனைத்துத் தரப்பினருக்குமான படைப்பாக இருக்கும்,” என்கிறார் ஜி.சிவா.
ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருபது நாள்கள் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர். படத்தில் இரண்டு பாடல்களும் சண்டைக் காட்சிகளும் இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.























