ஜோர்ஜ் டவுன்:
பினாங்கு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கொம்தார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
கோம்தாரின் பல பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கணுக்கால் அளவு வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது தொடர்பான காணொளி மற்றும் படங்களை கோம்தார் சட்டமன்ற உறுப்பினர் தெஹ் லாய் ஹெங் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

இன்று காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தங்சோங் தோக்கோங், ஆயர் ஈத்தாம், டத்தோ கெராமாட், ஜாலான் டிரான்ஸ்வர், ஜாலான் ரங்கூன் உட்பட பல சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றது.









