சட்டத்துறை தலைவராக அஹ்மட் தெரிருடினின் நியமனம் சரியான தேர்வு என்கிறார் அஸாலினா

ஜோகூர் பாரு:

ரும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் சட்டத்துறை தலைவராக டத்தோ அஹமட் தெரிருடின் முகமட் சாலே நியமிக்கப்பட்டது சரியான தேர்வு என்று பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம் தொடர்பான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்.

அஹமட் தெரிருடின் ஒரு சொலிசிட்டர் ஜெனரலாகவும், சட்டத்துறை தலைவர் பதவிக்கு பிறகு இரண்டாவது இடத்தில் இருப்பதாலும் இந்த தேர்வு சரியானது என்று அஸாலினா கூறினார்.

மேலும் அவர் மே 3, 2019 அன்று கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராகப் பொறுப்பேற்றார்.

“அவரது நியமனம் தொழில்முறை ரீதியில் மிகச் சரியான தேர்வு என்று நான் நம்புகிறேன்” என்று நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 2) இரவு தாமான் டாலியாவில் உள்ள கெம்பாஸ் மாநில சட்டமன்றத்தில் மாவட்ட வாக்களிப்பு மையத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here