கோலாலம்பூர்:
பக்காத்தான் ஹராப்பான் (PH ) மற்றும் பாரிசான் நேஷனல் (BN ) இடையேயான ஒத்துழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதற்கு நேற்று பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் (PH ) வெற்றி பெற்றது மிகப்பெரிய சான்றாகும்.
பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் சுஹைசான் வெற்றி பெற்றார். அதேநேரத்தில் சிம்பாங் ஜெராம் தொகுதியில் நஸ்ரி வெற்றி பெற்றார்.
இதனடிப்படையில் பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதிகளில் ஒற்றுமை அரசாங்க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.