தடுப்பூசிக்கான PICKids முன்பதிவு 663,641 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், பிப்ரவரி 8 :

தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கான (PICKids) பதிவு, நேற்றைய நிலவரப்படி (பிப்.7) 663,641 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

பள்ளி மட்டத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை குழந்தைககள் நோய்த்தடுப்புக்கான கோவிட்-19 சிறப்பு பணிக்குழு (CITF-C) அறிவிக்கும் என்று, இன்று அவர் தனது அதிகாரப்பூர்வ டூவிட்டர் கணக்கின் மூலம் தெரிவித்தார்.

“இந்த முன்பதிவுகள் பள்ளியால் பதிவு செய்யப்படுகிறது, மேலும் ஊசி போடும் பொது அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியில் போட்டுக்கொள்வது எளிது,” என்று அவர் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, கோலாலம்பூரில் 70,900 குழந்தைகள் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். நாட்டில் அதிகமான குழந்தைகள் பதிவு செய்து கொண்ட இடமாக கோலாலம்பூர் உள்ளது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here