டிஏபி மாநாட்டில் கலந்து கொண்ட முதல் அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட்

இரு கட்சிகளுக்கும் இடையே பல தசாப்தங்களான போட்டிக்கு பிறகு, 2023 டிஏபி (ஜசெக) மாநாட்டில் கலந்து கொண்ட முதல் அம்னோ தலைவர் என்ற வரலாற்றை உருவாக்கினார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. BN பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் மற்றும் அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி ஆகியோருடன் பாரிசான் நேஷனல் (BN) தலைவரும், துணைப் பிரதமருமான அவர் கௌரவ விருந்தினராக வந்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ டிஏபி உள்ளிட்டவைகள் அங்கம் வகிக்கும் கட்சிகள். பார்ட்டி அமானா நெகாரா தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அம்னோ 11 மே 1946 மற்றும் DAP 1966 இல் நிறுவப்பட்டது முதல், இரு கட்சிகளும் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், GE15க்குப் பிந்தைய காலத்தில், அம்னோ மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்த பிறகு போட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. நாடாளுமன்றத்தில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் எந்த அரசியல் கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஆலோசனையின் பேரில் ஒற்றுமை அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here