கெய்ரோ:
சூடானின் தெற்கு கார்த்தோம் என்ற பகுதியில் செயற்பட்டுவரும் ஒரு சந்தையில் ஆகாய வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் தொண்டூழிய அவசரகால நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்.10) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
சூடான் நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி உள்நாட்டுப் போர் வெடித்தது. அது முதல் தனி ஒரு தாக்குதலில் இந்த அளவுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது சூடானில் குடியிருப்புப் பகுதிகளில் மோதல் தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.