மீண்டும் உயர்நிலை அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம்

கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம் (Carlsberg Malaysia) மீண்டும் ஆர்ஓஇ எனப்படும் அதிக வருவாய் ஈட்டுதலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

14ஆவது The Edge Billion Ringgit Club (BRC) Awards விருது நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்பு, சேவை அம்சத்தில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக 3 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விருதினை இந்நிறுவனம் வென்றுள்ளது.

இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு தரவின்படி 2020ஆம் ஆண்டு 105.1 விழுக்காடு, 2021ஆம் ஆண்டில் 107.9 விழுக்காடு, 2022ஆம் ஆண்டில் 181.1 விழுக்காடு பங்குதாரர்களின் நிதிகளின் மீது வருமானத்தை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இது குறித்து பேசிய கார்ல்ஸ்பெர்க் மலேசியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டெஃபனோ கிளினீ, வாடிக்கையாளர்களின் சிறந்த சரக்கு நிறுவனம் என்ற அங்கீகாரத்தை அதுவும் மிகவும் உயர்தரமிக்க விருது நிகழ்ச்சியில் தொடர்ந்து 4ஆவது முறையாக இந்த விருதினை வெல்வது மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

இந்த அங்கீகாரத்தின் மூலம் நாங்கள் மேலும் ஊக்கமடைகின்றோம். பணியாளர்கள், நம்பிக்கைக் கொண்ட பங்குதாரர்கள், விசுவாசமான விற்பனைத் தொடர்பாளர்கள், ஆக்கப்பூர்வமான வர்த்தகம் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் இந்த விருதினைச் ங்மர்ப்பிக்கிறோம் என்றார் அவர்.

 கார்ல்ஸ்பெர்க் மலேசியா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி 7 பில்லியன் ரிங்கிட் சந்தை மூலதனத்தைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here