தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், விஷால், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக வரவு செலவு கணக்கு வைக்காதது தொடர்பாக விஷாலுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புகார் நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





















