மாட்சிமை தங்கிய பேரரசருடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு

கோலாலம்பூர்:

மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வானு கோபால மேனனை, நேற்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் இருந்தது, அப்போது மொத்த வர்த்தகம் RM181.3 பில்லியனாக இருந்தது, இது 2022 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட RM170.8 பில்லியனை விட 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அப்பதிவில் பேரரசர் குறிப்பிட்டார்.

அதேநேரம் கடந்த ஆண்டு மலேசியாவால் பதிவு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் 8.3 சதவீத பங்களிப்பை சிங்கை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here